Tuesday, July 25, 2017

கொஞ்சும் கொலைகாரி

கொஞ்சும் கொலைகாரி


என் இரத்தம் கண்டும்
இறங்காத உன் உள்ளம்
என் ஒரு நொடி பிரிவினால்
ஒரு நாள் உறைந்து போகும்.

உறவுகள் முறிந்த அந்த முன்றலில்
உன்னை முத்தமிட உன் கண்ணீர்துளிகளே மிஞ்சும்.

இனி
என் வார்த்தைகள் வதைபதாய்
வசைபாட உனக்கு வாய்பிருக்காது.
வதைக்கமட்டுமல்ல உன்னை இசைக்கவும்
நான் இல்லை.

 பிரிகிறேன்
பிரியும் பிரியமுடன் பிரியாத உன் பிரியன்.

ஷஃபி எச் . இஸ்மாயில்   

1 comment: