Latest

Monday, July 24, 2017

முறிக்கப்பட்ட என்புகளால் ஆனது உன் தாஜ்மகால்


முறிக்கப்பட்ட என்புகளால் ஆனது உன் தாஜ்மகால்
இதயங்களை படுகொலை செய்து பலிதீர்பவள் 
 
தொடர் மழையாய் கொட்டும் துயருற்றவர்களின் கண்ணீரில் உல்லாச குளியல் எடுக்கிறாய்.
 
எலும்பு மச்சையை முகப் பூச்சாக பூசி
உதட்டு சாயத்துக்காக இளம் சிவப்பு இரத்தம் கேட்பவள் நீ .

உன்னிடம் சரணகதியாகி ,சாஸ்டாங்கம் செய்யும் பாவிகலுக்கு
தலை அசைத்து வந்தனம் கூறுகிறாய்.
 
முறிக்கப்பட்ட என்புகளால் ஆனது உன் தாஜ்மகால்.
அங்கு பளிங்கு கற்களாக பளபளப்பது உன் பார்வையால் வசீகரிக்கபட்டு
பிடுங்க பட்ட கண்களே.
உன் கிரீடம் மிளிர வேண்டி உலகின் முழு பகலையும் சுவீகரித்தவள் நீ

இரவுகளை நீட்டி
உன் கூந்தல் அழகினை மெருகூற்றுகிறாய்.
தொலைவாய் தொலைந்து போ என்றாலும்
என் நிழலாய் தொடர்கிறாய் ........ 

ஷஃபி எச் . இஸ்மாயில்  

1 comment: