Latest

Thursday, July 27, 2017

இரவுகளில் தொலைந்து போன என் வர்ணம்(எனது தேசியமட்ட போட்டியில் விருது பெற்ற கவிதை)

இரவுகளில் தொலைந்து போன என் வர்ணம்


 இரவு இருள்
 மயான அமைதி
 திடீர் திடீரென மின்னும் சென்நிற மின்னல்
 பேர் இரைச்சல்
 இவைகளுக்குள் உரைந்து போனது என் வாழ்வின் வர்ணங்கள்

 எனக்காக பிறர் நடந்த பொழுதுகளில்
 எனக்காக பிறர் பேசிய தருணங்களில்
 என் தாயின் கைகளில் தவல்ந்த போது
 எனக்காக நான் நடக்கே வேண்டும்
 எனக்காக நான் பேச வேண்டும்
 என்ற என் கனவுகள் இவ் இரவுகளில்
 நிறம் இழந்து போனது.

 பல்கலை நுழைவதாய்
 காதலியின் மடியில் மெய் மறந்து இருப்பதாய்
 தாயின் பெருமூச்சில் பங்கடுப்பதாய்
 நான் கண்ட கனவுகளை காவு கொண்டடு போனது இந்த இரவுகள்.

 எம் வன்னியில்
 இரை தேட விடியலை காத்திருந்தது பறவைகள்
 நாம் இரையாகி போன சடலங்களை தேட காத்திருந்தோம்.

 அந்தோ சமாதான புறா விண் எழுகிறது
 இரவின் பயங்கரம் அதையும் கொன்று தீர்த்து.

ஷஃபி எச் . இஸ்மாயில்  

1 comment: