-----------------------
தொலை காட்டியைப் போல்
நீ எப்பொழுதும் உயரத்தையே பார்க்கிறாய்
உன் காதல் மின்னல்
அடிக்கடி கட்டிட உச்சியை நோக்கியே பாய்கிறது.
உனக்காக வானில் பட்டம் விட்டு சமிஞை செய்கிறேன்.
நீயோ என்னிடம் சிறகுடைந்த பட்டங்கள் கேட்கிறாய்.
கடிகார முட்களைப் போல் ஒவ்வொரு
நிமிடமும் உன்னையோ தழுவுகிறேன்.
காதல் மதுக்கடையில் அதிகமாகக்
குடிப்பவனுக்கு போதை ஏறுவதில்லை.
நான் உன் பெயரில் கவிதைகள் வரைகிறேன்
நீயோ என்பெயரில் பதவிகள் தேடுகிறாய்.
காதல் கடிகாரத்தில் நாட்களை விட
நிமிடங்களே மெதுவாகச் செல்லும்.
நீ வண்டுகளின் கால்கள் எண்ணுகிறாய்
நான் பூக்களின் அழகை ரசிக்கிறேன்.
காதலில் கனவுகளை விட நிஜங்களே
அதிகம் உண்மை பேசும்.
பகலில் என் காதலிக்காக உணர்வு
வலையை வீசுகிறேன்.
இரவில் நீ உன் காதலனுக்காக
அறிவு வலையை வீசுகிறாய்.
எனக்குத் தெரியும் நீயும் காதல்
வீணை இசைக்கிறாய் என்று
என்னவோ அது ஒரு நாளும் என்
காதில் விழுவதில்லை.
குழல்களும் உன் இதயத் துடிப்பை
ரசிக்க வேண்டுமென்கிறாய்
என்னிடம் உள்ளது வெறும் செவிகள் மட்டுமே.
நான் கண்ணீரால் கடிதம் எழுதுகிறேன்
அவற்றை நீ புன்னகையால் கிழித்தெரிகிறாய்.
காதல் சுவர்க்கத்தின் முடிவு நரகத்தின் வாயில்.
உன் காதல் ஒன்றுசேறும் நாளில் நானும் வருவேன் ஒரு காதல் மடலுடன்
அது உனக்கல்ல என் மரணக் காதலிக்கு
ஷஃபி எச் . இஸ்மாயில்
eva air booking
tìm vé máy bay đi mỹ
hang ve may bay korean
vé máy bay đi mỹ
đặt vé máy bay đi canada
Nhung Chuyen Di Cuoc Doi
Ngau Hung Du Lich
Kien Thuc Du Lich