Latest

Friday, July 28, 2017

To mark my baby's first birthday @ 9-9-2017


வானவில் நடுவே ஒரு
வளர்மதி உதித்தது.
வானவில் நடுவே ஒரு
வளர்மதி உதித்தது.
நீள் மதி வாழ்வில்
ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
முத்தமிட்டு மகிழ
ஒரு மலர்ச்செண்டு வந்தது.
இத்தணைத்து கழிய
ஒரு இளவஞ்சி கிடைத்தது.
மெத்தையில் துயில
ஒரு மெத்தனம் கிடைத்தது.
அப்பாவென அழைக்க
ஒரு மெல்லிசை திரண்டது.
மனதறி வாழ்வின்
மயக்கங்கள் தீர்ந்தது.
தனதறி வாழ்வின்
தயக்கங்கள் தகர்ந்தது.
நடிபங்கு நொடியில்
நகர்ந்தது.
காதலன், கணவன்
இன்று முதல் தந்தை.
இயலாய் இசையாய்
இருதயத்தின் குருதியாய்
மலராய்,மனமாய் மாந்தரின் அருளாய்
பிறந்தான் என் சந்ததி.
பொலிவிழந்த உறவுகளுக்கு
புதுப் பூச்சாய்
வார்த்தை போருக்கு
வழுவாத வரம்பாய்
பிறந்தான் இவன்.
இனி செல்ல சண்டைகளும்
சீக்கிரம்
தீர்ந்து போகும்.
தாயோடு பகை
குட்டியையும் பகைக்குமா?
முத்தான அவன் சிரிப்பை
முகராமல் விடலாமா?
அவள் அடைந்த தாய்ப்பட்டம்
என் ஆணாதிக்கம் தகர்த்தது.
முத்தமிழ் வித்தகர்கள்
பலர்கூடி
சற்ரென சமைத்தது
உன் உருவோ.
உத்தமர் உமராய்,
ஈடேற்றும் ஈஷாவாய்
ஈர் உலகிலும் வெற்றிபெற
இறைவனை பிரார்த்திக்கிறேன்.

1 comment: