தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புத்தர் சிலை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று புத்தபெருமான் சமாதிநிலை எய்த அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட இடமான பல்கலைக்கழக மேற்குப்புற எல்லையில் அமைக்கப்பட இருக்கும் புத்தர் சிலை, பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களுக்கு மட்டும் உரியதா? அல்லது அவர்களோடு சேர்த்து எதிர்காலத்தில் ஒலுவிலை அண்டிய பிரதேசத்தை நோக்கி துறைமுகம் அபிவிருத்தித் திட்டம் போன்ற வாயில்கள் மூலம் சாரை சாரையாக குடியேரயிருக்கும் சிங்கள பொது மக்களுக்கும் உரியதா? என்ற பலத்த சந்தேகம் நிலவும் நிலையில் கூட சிங்கள மாணவர்கள் சிலையமைக்கும் பணியில் துரிதமாக இறங்கி விட்டனர்.
சமாதி நிலையெய்திய புத்தரும் சரி சிறுபான்மையினரின் நிலங்களுக்கு வந்திரங்கிய சிங்கள மக்களும் சரி இலேசில் தமது பழைய நிலைக்கு பழைய இடத்திற்கு திரும்பிச் செல்ல மாட்டார்கள். வந்திரங்கிய இடத்தில் ஒரு குட்டி பௌத்த ராஜ்சியத்தை நிறுவும் பணியிலேயோ அல்லது தமது இனத்தின் அடயாளத்தை ஆழமாக பதியும் பணியிலேயோ ஈடுபடாமல் மறுவேலை பார்க்க மாட்டார்கள். இந்த உண்மையை நன்றாக புரிந்துவைத்திருக்கும் தென்கிழக்கு மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் சிலை அமைப்பது தொடர்பாக சில சிலுசிலுப்புக்கள் மேலெழுந்தாலும் சிங்கள மாணவர்கள் பெரும்பான்மையாக கல்வி பயிலும் கொழும்பு, பேராதனை போன்ற பல்கலைக்கழகங்களில் டாம்பீகமாக நிமிர்ந்து நிற்கும் முஸ்லிம் பள்ளிவாசல்களை கருத்திற் கொண்டு எதையாவது செய்திட்டு போகட்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர் தென்கிழக்கு வாசிகள்.
ஒரு சாரார் பல்கலைக்கழகத்திற்கு சிலை வந்ததற்கு முழுமுதல் காரண கர்த்தா பல்கலைக்கழக உபவேந்தர் என சாடத் தொடங்கியுள்ளனர்.. உண்மையில் உபவேந்தர் என விலாசம் இடப்பட்டு, உயர்கல்வி அமைச்சிலிருந்தோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இருந்தோ வரும் கடிதங்களில் உள்ள கட்டளைகளை அப்படியே பின்பற்றும் அரச அதிகாரியான உபவேந்தரை, இங்கு காரண கர்த்தாவாக சாடுவது பொருத்தமற்ற ஒன்றாகும். உபவேந்தர் என்பவர் தமக்கு மேலுள்ளவர்களின் கட்டளைகளை மறுப்பின்றி பின்பற்ற வேண்டிய ஓர் அரச ஊழியன் என்ற எதார்த்தத்தை இங்கு இவர்கள் புரிந்து கொள்ள தவறுகின்றனர். சிலை வைக்கும் விடயத்திலும் இவ்வாறான ஒரு கட்டளையையே உபவேந்தர் எதிர் கொண்டிருப்பார் என்பதை எம்மால் இலகுவாக ஊகித்தறிய முடியும்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புத்தர்சிலை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டதற்கு மிகமுக்கியமான நியாயமாக காட்டப்பட்டது முஸ்லிம் மாணவர்களுக்கு சிங்கள மாணவர்கள் பெரும்பான்மையாக கல்வி பயிலும் பல்கலைக்கழகங்களில் தமது சமய அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கு பள்ளிவாசல் கட்ட பெருந்தன்மையோடு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றமை ஆகும். உண்மையில் ஒரு சில பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு பள்ளிவாசல் கட்டுவதற்கும், வணக்க அறை ஒன்றை பேணுவதற்கும் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் கூட இன்னும் சில பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் தமது ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றுவதற்குக் வணக்க அறை ஒன்று வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. எடுத்துக் காட்டாக றுகுனு பல்கலைக்கழகத்தில் கணிசமான முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயின்றாலும் இன்னும் அவர்களுக்கு வணக்க அறை ஒன்று நிர்வாகத்தினால் வழங்கப்படவில்லை. மேலும் பள்ளி கட்டுவதற்கு பலமுறை அனுமதி கேட்கப்பட்டும் அனுமதி நிர்வாகத்தினால் மறுக்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் முஸ்லிம் மாணவர்களுக்கு ஒழுங்கான வணக்க அறை ஒன்று வழங்கப்படவில்லை. அண்மையில் வழங்கப்பட்ட அறையிலும் காலையில் தமிழ் நங்கையர்கள் பரதம் ஆட மதியநேரத்தில் முஸ்லிம் மாணவர்கள் ஜும்மாஆ தொழுகையை நடாத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வகையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கல்வி பயிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கு புத்தர்சிலை அமைக்க அனுமதிவழங்கப்பட்டதானது முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் மத சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுப்பு போன்ற நற்பண்புகளை பறைசாட்டுவதாகவுள்ளது.
எனவே முஸ்லிம்களின் இம்முன்மாதிரிகளைப் பின்பற்றி றுகுனு, ஸ்ரீஜயவர்த்தனபுர போன்ற பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் தமது சமய அனுஸ்டானங்களை இலகுவாக மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் முன்வர வேண்டும். மேலும் இது தொடர்பாக அரசியல் தலைமைகளும் கவனம் செலுத்த வேண்டும். இதுவே இன்றைய காலத்தின் தேவையும் ஆகும்.
பொன்மொழியான்
தென்கிழக்கு வளாகம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை

eva air vietnam
vé máy bay đi mỹ một chiều
korean air vietnam office
vé máy bay đi mỹ hãng nào rẻ nhất
vé máy bay đi canada giá rẻ
Cuoc Doi La Nhung Chuyen Di
Ngau Hung Du Lich
Kien Thuc Du Lich